செயல்பாடுகள்

1) கல்வி, 2) வேலைவாய்ப்பு, 3) பொருளாதார வளர்ச்சி என மூன்று பிரிவுகளாக பிரித்து விழி செயல்படுகிறது.

கல்வி:
1) அடிப்படைக் கல்வி கிடைக்காதவர்களுக்கு கல்வி கற்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துதல்
2) மேல்நிலைக் கல்வியைப் படித்தவர்கள், கல்லூரிப் படிப்பை தொடர்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தல்
3) கல்வி கற்கும்போது ஏற்படும் பிரச்சனைகளான ஆர்வமின்மை, கற்கும் தன்மையில் குறைபாடு (Learning Disabilities)  போன்றவற்றை நீக்குவதற்கு பயிற்சிகள்
4) உயற்கல்வியைத் தொடர அவர்களின் ஆர்வத்தைக் கண்டறிந்து முறையான ஆலோசனைகள்
5) மென்திறன் பயிற்சிகள் மூலம் நினைவாற்றல், தலைமைத்துவ ஆற்றலை அதிகப்படுத்துதல்
6) பொருளாதார சூழ்நிலையின் காரணமாக கல்வி கற்க முடியாதவற்களுக்கு பொருளாதார உதவிக்கான திட்டம்
7) அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளிடமிருந்து கல்வி உதவி பெறுவதற்கான முறைகளைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
8) கல்வி கற்கும் பருவத்திலிருந்தே சமூக நல விடயங்களில் ஆர்வம் செலுத்துவதற்கு தயார்படுத்துதல்

வேலைவாய்ப்பு:
1) படித்து முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கான இண்டர்வியூ, பப்ளிக் ஸ்பீகிங், கம்யூனிசேன் பயிற்சி முகாம்கள்
2) பெரிய நிறுவனங்களைத் திரட்டி குறைந்தது வருடத்திற்கு ஒருமுறை வேலைவாய்ப்பு முகாம்களை ஏற்பாடு செல்தல்
3) தகுதிக்கேற்றார்போல் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வேலைபெறுவதற்கு ஆலோசனைகளை வழங்குதல்
4) தொழில் முனைவோராக விருப்பம் உள்ளவர்களை சுயமாக தொழில் தொடங்குவதற்கு ஆலோசனையையும். நிதி உதவி பெறுவதற்கான முறையையும் குறித்து வழிகாட்டுதல்

பொருளாதார மேம்பாடு: 
1) பொருளாதார மேம்பாடு குறித்து மனரீதியான உள்ள தடைகளை நீக்கி மென்மேலும் தாங்கள் செய்யும் தொழிலில் வெற்றிபெற பல்துறை வல்லுநுர்களை வைத்து பயிற்சி முகாம்கள்
2) நிதி மேலாண்மை, சந்தைப்படுத்துதல் போன்றவற்றை தெரிந்துக்கொள்வதற்கான பொது நிகழ்ச்சிகள்
3) சிறுசேமிப்பு முறையை ஊக்குவிக்கும் விதமாக விழிப்புணர்வு பிரச்சாரங்கள்
4) வட்டியில்லா கடன்திட்டத்தின் மூலம் சமூகத்தீமையான வட்டியிலிருந்து மக்கள் விடுபட வழிவகுத்தல்

Comments